பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12,134 பயனாளிகளுக்கு ரூ.3.44 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலட்சுமி நலத்திட்டங்களை வழங்கினார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஊக்கத் தொகை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிதி, மினி டெய்ரி அமைக்க கடனுதவி, தாட்கோ திட்டத்தில் கறவை மாட்டு கடனுதவி, பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ந.மிருணாளினி, அப்துல் ராசிக், சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.குஷியில் பால் உற்பத்தியாளர்கள்: ரூ.3.44 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலட்சுமி நலத்திட்டங்களை வழங்கினார்.